வடிவேலுவை ஊர் ஊராகப் பேச வச்சி… விஜயகாந்தை விமர்சிக்க வச்சி ஏமாத்திய திமுக.. மல்லை சத்யா விமர்சனத்திற்கு வைகோ அதிரடி பதிலடி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வடிவேலுவை ஊர் ஊராகப் பேச வச்சி… விஜயகாந்தை விமர்சிக்க வச்சி ஏமாத்திய திமுக.. மல்லை சத்யா விமர்சனத்திற்கு வைகோ அதிரடி பதிலடி…!!

Published

on

தன்னை ‘அரசியல் வடிவேலு’ என்று விமர்சிப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவையில் செய்தியாளர்களிடம் பதிலளித்துள்ளார். வடிவேலு இல்லையென்றால் பல திரைப்படங்கள் ஓடியிருக்காது என்றும், அத்தகைய கலைஞருடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை, மாறாக மகிழ்ச்சியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடிவேலு விவகாரத்தைச் சுட்டிக்காட்டி திமுக மீது வைகோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சினிமாவில் உச்சக்கட்டத்தில் இருந்த வடிவேலுவை திமுகவினர் அழைத்து வந்து, ஊர் ஊராக விஜயகாந்தை விமர்சித்துப் பேச வைத்து, கடைசியில் அவரை ஏமாற்றி ‘ஃபீல்ட் அவுட்’ ஆக்கித் தெருவில் விட்டுவிட்டதாக அவர் சாடியுள்ளார்.

Advertisement

அதேபோல், திமுகவில் தன்னை அவமானப்படுத்தியதால்தான் அங்கிருந்து வெளியேறியதாகவும் வைகோ விளக்கமளித்துள்ளார். மல்லை சத்யா உள்ளிட்டோர் தன்னை விமர்சித்திருந்த நிலையில், அந்த விமர்சனங்களுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ள வைகோவின் இந்தப் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in