“முதலிரவு முடிந்த மறுநாளே மணப்பெண்ணுக்கு பிறந்த குழந்தை..” புதுமாப்பிள்ளைக்குக் காத்திருந்த செம ஷாக்.. போலீஸ் விசாரணையில் உடைந்த திடுக்கிடும் உண்மை – cinefeeds
Connect with us

CRIME

“முதலிரவு முடிந்த மறுநாளே மணப்பெண்ணுக்கு பிறந்த குழந்தை..” புதுமாப்பிள்ளைக்குக் காத்திருந்த செம ஷாக்.. போலீஸ் விசாரணையில் உடைந்த திடுக்கிடும் உண்மை

Published

on

திருநெல்வேலியில் திருமணமான மறுநாளே மணப்பெண்ணுக்குக் குழந்தை பிறந்த சம்பவம் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 15-ஆம் தேதி நெல்லையைச் சேர்ந்த இளம் ஜோடிக்குப் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணச் சடங்குகள் முடிந்து, அன்று இரவு முதலிரவு ஏற்பாடுகளும் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், திருமணமான மறுநாளே மணப்பெண்ணுக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டின் கழிவறைக்குச் சென்ற அந்தப் பெண், அங்கு இறந்த நிலையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். திருமணமான ஒரே நாளில் வீட்டின் கழிவறையில் மணப்பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததைக் கண்ட புதுமாப்பிள்ளையும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

Advertisement

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், அந்த மணப்பெண்ணுக்குத் திருமணத்திற்கு முன்பே வேறொரு ஆண் நண்பருடன் பழக்கம் இருந்ததும், அதன் மூலம் அவர் கர்ப்பமானதும் தெரியவந்துள்ளது. கர்ப்பமான விஷயத்தை மறைத்து அவருக்குத் திருமணம் செய்து வைத்தது அம்பலமானதைத் தொடர்ந்து, இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in