CRIME
யாரும் எதிர்பார்க்காத திடுக்கிடும் திருப்பம்… ரெயில் சீட்டுக்கு அடியில் கிடந்த பெண் சடலம்… சிசிடிவி-யில் சிக்கிய வாலிபர்..! விசாரணையில் வெளியான பகீர் சம்பவம்..!!
நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு, அடுத்த பயணத்திற்காக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய யார்டில் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 11-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த பயணிகள் ரெயில் பெட்டிகள் சுத்தம் செய்வதற்காக யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்கு புறப்படும் பயணிகள் ரெயிலில் இணைப்பதற்காக ஏற்கனவே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை தயார் செய்யும் பணி நடந்தது.
அப்போது ஒரு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பெட்டிக்குள் ஏறி சோதனை செய்தபோது, இருக்கைக்கு கீழ் அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடந்தது. தகவலின்பேரில் விரைந்து வந்த ரெயில்வே போலீசார் ஆய்வு செய்ததில், சடலமாக கிடந்தது பெண் என்பது தெரிய வந்தது; முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகிய நிலையில் இருந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சடலமாக கிடந்த பெண் இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், அவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ரெயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகப்படும் படியான வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக ரெயில் பெட்டிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றுவிட்டு உடலை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு தப்பியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருவதுடன், கொலையான பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்; இச்சம்பவம் நாகர்கோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
