CRIME
“எனக்குப் பிடிச்ச சாப்பாடு எங்க..?” போதையில் தட்டைத் தூக்கி எறிந்த மகன்.. கோபத்தின் உச்சத்தில் அப்பா செய்த கொடூரச் செயல்..! உறைய வைக்கும் சம்பவம்..!!
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தின் ஹன்ஸ்டிஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்த்தா கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகன் மகேஷ் மாஞ்சி, அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார். புதன்கிழமை மாலையும் போதையில் வந்த மகேஷ், தனக்குப் பிடித்த உணவு கிடைக்காததால் தந்தை ஜனார்தன் மாஞ்சி மற்றும் தாய் பூலோ தேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வீட்டில் சமைக்கப்பட்ட உணவைத் தூக்கி எறிந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடும் ஆத்திரத்தில், வீட்டிலிருந்த மண்வெட்டியால் மகேஷின் தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் தந்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஹன்ஸ்டிஹா போலீசார், மகேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தந்தை ஜனார்தன் மாஞ்சியைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தில் இறந்தவரின் தாய் பூலோ தேவியின் பங்கு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது; இருப்பினும், அவரது ஈடுபாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை எனவும், கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் அனைத்துக் கோணங்களிலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
