CRIME
உச்சகட்ட பதற்றம்.. தங்கைக்காகச் சென்ற அண்ணனுக்குக் காத்திருந்த எமன்.. பாஜக தலைவரின் மகன் துடிதுடித்து பலி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் புல்டோசர் வாகனம் மோதிய கோர விபத்தில், பாஜக தலைவரின் 13 வயது மகன் ஆர்யவர்தன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில், ஆர்யவர்தன் தனது சகோதரியைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகத் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் அதிவேகமாக வந்த புல்டோசர் ஒன்று, எதிர்பாராத விதமாக அவரது ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதி ஏறியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
13 வயதே ஆன தங்களது மகன் புல்டோசர் விபத்தில் உயிரிழந்ததால் ஆத்திரமும் வேதனையும் அடைந்த ஆர்யவர்தனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
