“பூஜை பிரசாதத்தில் மயக்க மருந்து…” ஆபாச வீடியோ எடுத்து 10 வருடமாக மிரட்டி ரூ.7.45 கோடி பறித்த ஹனிட்ராப் கும்பல்.. 62 வயது தொழிலதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“பூஜை பிரசாதத்தில் மயக்க மருந்து…” ஆபாச வீடியோ எடுத்து 10 வருடமாக மிரட்டி ரூ.7.45 கோடி பறித்த ஹனிட்ராப் கும்பல்.. 62 வயது தொழிலதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் லால்குவான் பகுதியைச் சேர்ந்த 62 வயது தொழிலதிபர் சுபாஷ் சந்த் என்பவர், ‘ஹனிட்ராப்’ வலையில் சிக்கிப் பல கோடி ரூபாய் பணத்தையும் சொத்துக்களையும் இழந்த அதிர்ச்சிச் சம்பவம் ஹல்த்வானியில் நிகழ்ந்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகமான நபர் ஒருவர் மூலமாக ஜோதி சிங் என்ற பெண்ணுடன் சுபாஷ் சந்துக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருக்கமான நிலையில், அந்தப் பெண் தனது வீட்டில் நடைபெறும் பூஜைக்கு வருமாறு சுபாஷ் சந்தை அழைத்துள்ளார். அங்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்திருந்ததாகவும், அதனைச் சாப்பிட்டு மயங்கிய நிலையில் இருந்த தன்னை ஆபாசமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டதாகவும் தொழிலதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகவும், பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து விடுவதாகவும் மிரட்டி அந்தக் கும்பல் மிரட்டல் விடுக்கத் தொடங்கியுள்ளது. இதற்குப் பயந்த தொழிலதிபர், 2016-ஆம் ஆண்டில் சுமார் ரூ.45 லட்சத்தைக் கொடுத்துள்ளார். பின்னர் 2022-ஆம் ஆண்டில் மீண்டும் மிரட்டலைத் தொடங்கிய அந்தக் கும்பல், ரொக்கமாகவும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும் சுமார் ரூ.5 கோடி பணத்தைப் பறித்ததுடன், ரூ.2 கோடி மதிப்பிலான நான்கு வீட்டு மனைகளையும் ஜோதி சிங் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெயருக்கு எழுதி வாங்கியுள்ளது. தொடர் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான சுபாஷ் சந்த் அளித்த புகாரின் பேரில், ஹல்த்வானி காவல்துறையினர் அந்தப் பெண் உட்பட 5 பேர் மீதும், அடையாளம் தெரியாத 2 நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in