“செத்துப் பிறந்துச்சு அதான்..” பிறந்தது பெண் குழந்தை என்பதால் உயிருடன் புதைத்த குடும்பம்… மருத்துவமனையில் கேட்ட கேள்வியால் சிக்கிய பகீர் நாடகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“செத்துப் பிறந்துச்சு அதான்..” பிறந்தது பெண் குழந்தை என்பதால் உயிருடன் புதைத்த குடும்பம்… மருத்துவமனையில் கேட்ட கேள்வியால் சிக்கிய பகீர் நாடகம்..!!

Published

on

ராமேஸ்வரத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த லோக நந்தினிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. பிறந்தது பெண் குழந்தை என்பதால், அதைக் குழி தோண்டி உயிருடன் புதைத்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து லோக நந்தினியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் குழந்தை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது குழந்தை இறந்து பிறந்ததால் புதைத்துவிட்டதாக அவர்கள் நாடகமாடியுள்ளனர்.

இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார், குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகப் பிரசவம் பார்த்த நாத்தனார் முனீஸ்வரி, தாய் லோக நந்தினி, கணவர் நாக பாண்டி மற்றும் மாமனார் கிருஷ்ணன் ஆகிய நான்கு பேரைக் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in