CRIME
“மின்விசிறியில் தொங்கிய துப்பட்டா… தரையில் கிடந்த 22 வயது மாணவி..!” அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த மர்மம் என்ன..? டைரியில் சிக்கிய பழைய கடிதத்தால் பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் சின்ஹட் பகுதியில், வாடகை அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிப் படித்து வந்த 22 வயது கட்டிடக்கலை மாணவி ஷிவானி மிஸ்ரா உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 18-ஆம் தேதி மாலை அவரது தோழி அறைக்குத் திரும்பியபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்துக் காவலாளியின் உதவியுடன் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, ஷிவானி தரையில் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில், அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா தொங்கிக் கொண்டிருந்ததும், மாணவியின் டைரியில் பழைய தற்கொலைக் குறிப்பு ஒன்று எழுதப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இருப்பினும், தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஷிவானியின் தந்தை சந்தேகம் எழுப்பியுள்ளார். மாணவியின் மரணம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
