“வீட்டுக்குள் பாய்ந்த தோட்டாக்கள்..” இளைஞரின் வீட்டைக் குறிவைத்து நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பகீர் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“வீட்டுக்குள் பாய்ந்த தோட்டாக்கள்..” இளைஞரின் வீட்டைக் குறிவைத்து நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பகீர் சிசிடிவி காட்சி..!!

Published

on

சிட்டி கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனகர்புரா பகுதியில், இளைஞர் ஒருவரின் வீட்டின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சினிமா பாணியில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் ஸ்கூட்டரில் வந்த கும்பல், தினேஷ்சந்திர சௌராசியா என்பவரின் வீட்டை நோக்கி அடுத்தடுத்துத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இந்தத் தாக்குதலில் முதல் தோட்டா வீட்டிற்குள் இருந்த குளிர்சாதனப் பெட்டியிலும் இரண்டாவது தோட்டா வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரிலும் பாய்ந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், இந்தப் பகீர் சம்பவம் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போலப் பரவி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தினேஷ்சந்திர சௌராசியா அளித்த புகாரின் பேரில், அமீர் என்ற பூமா, அடில் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in