“பஸ் ஸ்டாண்டில் போன் கொடுத்தது ஒரு குற்றமா..?” செய்யாத கொலைக்காக 2.5 ஆண்டுகள் சிறையில் வாடிய அப்பாவி இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி ட்விஸ்ட்.. சினிமாவையே மிஞ்சிய பயங்கர சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“பஸ் ஸ்டாண்டில் போன் கொடுத்தது ஒரு குற்றமா..?” செய்யாத கொலைக்காக 2.5 ஆண்டுகள் சிறையில் வாடிய அப்பாவி இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி ட்விஸ்ட்.. சினிமாவையே மிஞ்சிய பயங்கர சம்பவம்..!!

Published

on

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா பகுதியைச் சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண்ணுக்கு, கடந்த 2019-ஆம் ஆண்டு அவரது விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த மஞ்சு, 2019 ஜூன் 23-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி பாண்டவபுரா பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த ராஜேஷ் என்ற இளைஞரிடம், தனது குடும்பத்தினருக்குப் போன் செய்ய வேண்டும் எனக் கூறி அவரது செல்போனை வாங்கிப் பேசிவிட்டு அங்கிருந்து மாயமானார். மகளைக் காணவில்லை என மஞ்சுவின் தந்தை நாகராஜு புகார் அளித்த நிலையில், இரண்டு ஆண்டுகள் தேடியும் கிடைக்காததால் போலீசார் அந்த வழக்கை முடித்து வைத்தனர். ஆனால், 2021-ஆம் ஆண்டு மீண்டும் காவல் நிலையம் சென்ற மஞ்சுவின் தந்தை, கடைசியாகத் தனது மகள் பேசிய செல்போன் எண்ணின் உரிமையாளரான ராஜேஷ்தான் மகளைக் கடத்தி கொலை செய்திருக்க வேண்டும் எனக் குற்றம் சாட்டினார்.

எந்தவிதத் தீவிர விசாரணையுமின்றி, வெறும் அந்த ஒரு செல்போன் அழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ராஜேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். செய்யாத குற்றத்திற்காக சுமார் இரண்டரை ஆண்டுகள்சிறையில் வாடிய ராஜேஷ், 2024-ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வந்த பிறகும் சும்மா இருக்காத அவர், தனது வழக்கறிஞர் நடேஷ் மற்றும் நண்பர்களின் உதவியுடன் ‘கொலை செய்யப்பட்டதாகக்’ கூறப்பட்ட மஞ்சுவைத் தீவிரமாகத் தேடத் தொடங்கினார்.

Advertisement

இந்நிலையில், கடந்த நவம்பர் 11, 2026 அன்று மஞ்சு உயிரோடு இருப்பதையும், பாண்டவபுரா அருகிலுள்ள ஒரு கிராமத்தில் தனது காதலன் நாகேந்திராவைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதையும் ராஜேஷ் கண்டுபிடித்து, அவரைப் போலீசாரிடம் ஒப்படைத்தார். தான் வீட்டை விட்டு வெளியேறித் தமிழ்நாட்டிற்குச் சென்று காதலனைத் திருமணம் செய்து கொண்டதாகவும், பேருந்து நிலையத்தில் போன் வாங்கிப் பேசியதைத் தவிர ராஜேஷை தனக்கு யார் என்றே தெரியாது என்றும் மஞ்சு வாக்குமூலம் அளித்துள்ளார். உரிய ஆதாரங்கள் இன்றி காவல்துறை எடுத்த அவசர நடவடிக்கையால், மனிதாபிமான அடிப்படையில் போன் கொடுத்து உதவிய ஒரு அப்பாவி இளைஞர் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in