CRIME
“புத்திசாலித்தனமாகத் திட்டமிட்ட கள்ளக்காதலர்கள்..!” ஆனால் செய்த அந்த ஒரு சின்னத் தவறு… ஆயுள் தண்டனை வரை கொண்டு சென்ற திகில் சம்பவம்..!!
2018-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பர்குவா கிராமத்தில், கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடலை அடையாளம் காண்பதில் காவல்துறையினருக்குப் பெரும் சவால் இருந்தபோதிலும், சம்பவ இடத்தில் கிடந்த பிஸ்கட் அட்டைப்பெட்டி மற்றும் ஃபிரிட்ஜ் அட்டையில் எழுதப்பட்டிருந்த ஒரு செல்போன் எண் விசாரணையின் போக்கை ஜான்சி நகரத்திற்குத் திருப்பியது. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு, 2019 ஜனவரியில் ஜான்சியைச் சேர்ந்த ஓட்டுநர் ரிங்கு பரத்வாஜ் காணாமல் போனதாக அவரது மனைவி ஹேமலதா புகார் அளித்ததைத் தொடர்ந்து, சடலத்தின் உடைகள் மூலம் அது ரிங்குதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
காவல்துறையின் தீவிர விசாரணையில், ரிங்குவின் மனைவி ஹேமலதாவிற்கும், பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்த அர்மான் கான் என்பவருக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் ரிங்குவிற்குத் தெரியவந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால், அவரைக் கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். அதன்படி, 2018 ஜூன் 14-ஆம் தேதி இரவு அர்மான் கான் ரிங்குவை கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்து, உடலை ஒரு சாக்கில் கட்டி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தார். பின்னர், பேக்கரியில் இருந்து கொண்டு வரப்பட்ட அட்டைப்பெட்டியில் உடலை வைத்து சிவபுரி சாலையோரத்தில் வீசிச் சென்றனர்.
சம்பவ இடத்தில் கிடைத்த அட்டைப்பெட்டியில் இருந்த செல்போன் எண் மூலம் அந்த பேக்கரியைக் கண்டறிந்த காவல்துறையினர், அட்டையில் ஒட்டியிருந்த பச்சை நிறப் பெயிண்டையும் பேக்கரி சுவரின் பெயிண்டையும் ஒப்பிட்டுத் தடயங்களை உறுதி செய்தனர். மேலும், ரிங்குவின் வீட்டுப் படுக்கையில் இருந்த இரத்தக் கறைகள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் கைப்பற்றி, 2019 ஜூன் 1-ஆம் தேதி ஹேமலதா மற்றும் அர்மான் கான் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 24 சாட்சிகளின் விசாரணைக்குப் பிறகு, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 2024 மே 13-ஆம் தேதி நீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
