“அடப்பாவமே.. திருமணமான 5 மாதங்களில் இப்படியா..?” தாம்பத்தியத்திற்கு மறுத்த மனைவி! தட்டிக்கேட்ட புதுமாப்பிளைக்கு நேர்ந்த கொடூர கதி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவமே.. திருமணமான 5 மாதங்களில் இப்படியா..?” தாம்பத்தியத்திற்கு மறுத்த மனைவி! தட்டிக்கேட்ட புதுமாப்பிளைக்கு நேர்ந்த கொடூர கதி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

அபய் என்பவருக்கும் நந்தினி குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் 2026-இல் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி தன்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடத் தொடர்ந்து மறுத்து வந்ததாகவும், கணவர் வீட்டில் சிறிது காலம் தங்கிவிட்டு அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கே சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அபய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த தனது உறவினரும், மனைவியின் அக்காவைக் கட்டிய மைத்துனருமான பிரவீன் சௌத்ரியிடம் அபய் தனது குடும்பப் பிரச்சனைகள் குறித்து முறையிட்டுள்ளார்; ஆனால், இந்த விவகாரம் இரு குடும்பங்களுக்கும் இடையிலான மோதலாக உருவெடுத்தது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 9-ஆம் தேதி ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பிரவீன் சௌத்ரி மற்றும் அவரது உறவினர்கள் அபய்யின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கைகலப்பு முற்றியதில், கிரிக்கெட் மட்டையால் அபய்யின் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதோடு, அவரது பெற்றோரும் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய அபய் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகப் பாட்னாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி நவம்பர் 12-ஆம் தேதி அபய் பரிதாபமாக உயிரிழந்தார்; திருமணமான ஐந்தே மாதங்களில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in