“அப்பா வேண்டாம், நாங்கள் செத்துடுவோம்” கதறிய 5, 7 வயது மகன்களை… சாக்லேட் ஆசை காட்டி உயிரை பறித்த கொடூர தந்தை.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அப்பா வேண்டாம், நாங்கள் செத்துடுவோம்” கதறிய 5, 7 வயது மகன்களை… சாக்லேட் ஆசை காட்டி உயிரை பறித்த கொடூர தந்தை.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

Published

on

மகாராஷ்டிராவில் பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சோம்நாத் என்ற நபர் தனது 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகன்களையும் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

கால்வாய்ப் பகுதிக்குச் சென்ற அவர், குழந்தைகளைத் தண்ணீருக்குள் வீச முயன்றபோது, “அப்பா வேண்டாம், நாங்கள் இறந்துவிடுவோம்” என அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் கதறித் துடித்துள்ளனர். ஆனால், குழந்தைகளின் கதறலைச் சற்றும் பொருட்படுத்தாத சோம்நாத், ஈவிரக்கமின்றி அவர்களைக் கால்வாயில் வீசி இந்தப் பாதகச் செயலைச் செய்துள்ளார்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரத்தில் சோம்நாத் தனது மகன்களைக் கொலை செய்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in