CRIME
“பூங்காவில் விளையாடலாம் வாங்க” 2 சிறுமிகளை ஆசைகாட்டி அழைத்துச்சென்று… 65 வயது கொடூரன் செய்த கேவலமான செயல்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் 8 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 65 வயது முதியவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அசோக் தியாகி என்ற அந்த முதியவர், பூங்காவில் விளையாடலாம் என ஆசை வார்த்தை கூறி அந்தச் சகோதரிகளை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அவர்களை ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, குற்றம் சாட்டப்பட்ட அசோக் தியாகியை மடக்கிப் பிடித்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைச் சரமாரியாகத் தாக்கி தர்ம அடி கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் பொதுமக்கள் அவரை ஒப்படைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கைதான அசோக் தியாகியின் சொந்த ஊர் மீரட் என்பது தெரியவந்துள்ளது. அவர் தனது மகனின் வேலை நிமித்தமாக கோரக்பூருக்கு வந்து தங்கியிருந்த போது இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கோரக்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
