CRIME
“எனக்கு இனி வாழ விருப்பமில்லை.. .நீங்களாவது சந்தோஷமாக இருங்கள்..” மனைவியின் கொடூர சித்திரவதையை தாங்காமல் பெற்றோருக்கு செல்ஃபி வீடியோ அனுப்பிய மகன்.. அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி..!!
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம், பாலாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட மோத்திகனாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபிரசாத் (23). இவர் தனது மனைவி தன்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாகவும், இனியும் உயிர் வாழ விருப்பமில்லை என்றும் கூறித் தனது பெற்றோருக்குச் செல்ஃபி வீடியோ ஒன்றை அனுப்பிவிட்டு மாயமாகியுள்ளார். அந்த வீடியோவில், தனது மனைவி அடிக்கடி தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டித் துன்புறுத்துவதாகவும், அடித்துக் கடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டில் உள்ள பெரியவர்கள் முன்பு தன்னை மட்டுமே குற்றவாளியாகச் சித்தரிப்பதாகவும், சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் அவர் அந்த வீடியோவில் கதறியுள்ளார்.
தனது பெற்றோரிடம், “எனக்கு இனி இந்த வாழ்க்கையை வாழ விருப்பமில்லை, நீங்களாவது சந்தோஷமாக இருங்கள்” என்று உருக்கமாகக் கூறிய சிவபிரசாத், தனது இருசக்கர வாகனத்தில் ஹைதராபாத் நோக்கிப் புறப்பட்டுள்ளார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவர் கோத்தூர் அருகே தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்கிருந்து மாயமானது தெரியவந்துள்ளது. மகனின் இந்த அதிர்ச்சி வீடியோவைக் கண்டு பதறிப்போன பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான சிவபிரசாத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
