“அடக்கடவுளே.. GPay-ஆல் வந்த வினை..” கத்தியுடன் திரும்பி வந்து அப்பாவி பால் வியாபாரியைத் தீர்த்துக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர்.. நடந்தது என்ன..? குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கடவுளே.. GPay-ஆல் வந்த வினை..” கத்தியுடன் திரும்பி வந்து அப்பாவி பால் வியாபாரியைத் தீர்த்துக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர்.. நடந்தது என்ன..? குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கே.கைலாசபுரம் கிராமத்தில், சூப்பர் மார்க்கெட்டில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தியதில் ஏற்பட்ட தகராறில், கடை உரிமையாளருக்கு ஆதரவாகப் பேசிய பால் வியாபாரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 17-ஆம் தேதி இரவு, அப்பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி நடேஷ்குமார் (45) என்பவர் சூப்பர் மார்க்கெட்டிற்குப் பொருட்கள் வாங்கச் சென்றபோது, கீழக்கோட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகாராஜா என்பவர் கூகுள் பே மூலம் பணம் செலுத்தியுள்ளார். ஆனால், பணம் தனது வங்கிக் கணக்கில் வரவில்லை எனக் கடை உரிமையாளர் சுப்பிரமணியன் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட, கடை உரிமையாளருக்கு ஆதரவாகப் பேசிய நடேஷ்குமார் மகாராஜாவைக் கண்டித்துள்ளார்; இதனால் ஆத்திரமடைந்து அங்கிருந்து சென்ற மகாராஜா, சற்று நேரத்தில் மீண்டும் கடைக்கு வந்து நடேஷ்குமாருடன் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த நாரைக்கிணறு காவல்துறையினர் நடேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர் மகாராஜாவை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடேஷ்குமாரின் மனைவி தேவி விபத்தில் உயிரிழந்துவிட்ட நிலையில், தற்போது தந்தையும் கொலை செய்யப்பட்டுள்ளதால் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் தாய், தந்தை இருவரையும் இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அந்த இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் கல்விச் செலவுகளுக்கு யார் உதவுவார்கள் என்ற ஆழ்ந்த கவலையும் சோகமும் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in