“பெண் குழந்தைகள் பிறந்தது குற்றமா..?” காதல் கணவனின் கொடூர சித்திரவதையால் 25 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“பெண் குழந்தைகள் பிறந்தது குற்றமா..?” காதல் கணவனின் கொடூர சித்திரவதையால் 25 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை ஊரக மண்டலத்திற்கு உட்பட்ட பெத்த லிங்கரெட்டிபள்ளி கிராமத்தில், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாலும், சாதி ரீதியான பாகுபாடு மற்றும் வரதட்சணைக் கொடுமையாலும் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முகமது சோஹேல் என்பவர், மனிஷா என்கிற ஷாஹீனா (25) என்ற பெண்ணை கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகப் பிறந்ததால், சோஹேலும் அவரது குடும்பத்தினரும் மனிஷாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்; மேலும், அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் எனக் கூறிச் சாதி ரீதியாக அவமானப்படுத்தியதோடு, கூடுதல் வரதட்சணை கேட்டுச் சோஹேல் அவரை உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்துள்ளார்.

இந்தக் கொடுமைகள் குறித்து மனிஷா ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, போலீசார் இரு தரப்பினருக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அதன் பிறகும் கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படாமல் கொடுமைகள் மேலும் தீவிரமடைந்ததால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மனிஷா துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மனிஷாவின் தாயார் ரேணுகா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in