“புல்லட் பைக், 51 ஆயிரம் பணம் தந்தால்தான் கல்யாணம்..” மாற்றுத்திறனாளி தந்தையைக் கதறவிட்ட கொடூரம்.. திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் மாப்பிள்ளை வீட்டார் செய்த துரோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“புல்லட் பைக், 51 ஆயிரம் பணம் தந்தால்தான் கல்யாணம்..” மாற்றுத்திறனாளி தந்தையைக் கதறவிட்ட கொடூரம்.. திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் மாப்பிள்ளை வீட்டார் செய்த துரோகம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில், வரதட்சணை பேராசையால் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹாரன்பூர் மாவட்டத்தின் நகுட் நகரப் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தந்தை ஒருவர், மிகுந்த சிரமத்திற்கு இடையே தனது மகளின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். மேலும், மாப்பிள்ளை வீட்டாருக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களை வழங்கவும் அவர் சம்மதித்திருந்தார்.

இந்நிலையில், திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்த சூழலில், மாப்பிள்ளை வீட்டார் திடீரெனப் புதிய வரதட்சணை நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதாவது, கூடுதலாக ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள், ரூ.51,000 ரொக்கப் பணம் மற்றும் மாப்பிள்ளையின் சகோதரிக்குத் தங்கத் தோடுகள்ஆகியவற்றை வழங்க வேண்டும் என அவர்கள் மிரட்டியுள்ளனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் திருமண ஊர்வலத்துடன் வரமாட்டோம் எனக் கூறித் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

Advertisement

மாற்றுத்திறனாளி தந்தையின் கடின உழைப்பையும், ஒரு பெண்ணின் எதிர்காலத்தையும் சிதைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலிருந்து நகுட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மாப்பிள்ளை உட்பட 6 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், வரதட்சணைக் கொடுமை செய்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிப் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in