“மனைவியை அந்நியர்களுடன் பங்குபோட்ட முன்னாள் அரசியல்வாதி..” போதை மருந்து கொடுத்து வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்.. 13 வருட மர்மத்தை உடைத்த பகீர் வாக்குமூலம்..! – cinefeeds
Connect with us

CRIME

“மனைவியை அந்நியர்களுடன் பங்குபோட்ட முன்னாள் அரசியல்வாதி..” போதை மருந்து கொடுத்து வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்.. 13 வருட மர்மத்தை உடைத்த பகீர் வாக்குமூலம்..!

Published

on

இங்கிலாந்தில் தனது மனைவிக்கு போதை மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்து, 13 ஆண்டுகளாக இணையத்தில் சந்தித்த அந்நியர்களை வீட்டிற்கு அழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய முன்னாள் அரசியல்வாதியின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு இங்கிலாந்தின் ஸ்விண்டன் பகுதியைச் சேர்ந்த 50 வயதான முன்னாள் உள்ளூர் அரசியல்வாதி பிலிப் யங், தனது மூன்று குழந்தைகளின் தாயான முன்னாள் மனைவி ஜோன் யங்கிற்கு போதை மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து சுயநினைவிழக்கச் செய்துள்ளார்.

பின்னர், “மனைவியைப் பகிர்ந்துகொள்ளும்” தனது விசித்திரமான பாலியல் கற்பனைக்காக, 13 ஆண்டுகளாகப் பல ஆண்களை வீட்டிற்கு வரவழைத்துத் தனது மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளார். 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த காவல்துறை விசாரணையின் போது, மனைவிக்கு இதில் விருப்பமில்லை என்பதை அறிந்தே தான் இத்தகைய கொடூரத்தில் ஈடுபட்டதாக பிலிப் யங் அளித்த வாக்குமூல வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் உறைய வைத்துள்ளது.

Advertisement

கடந்த 2024-ஆம் ஆண்டில் பிலிப் யங்கின் மின்னணு சாதனங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, தனது மனைவியைத் துன்புறுத்திய ஏராளமான புகைப்படங்களும் வீடியோக்களும் சிக்கின. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், பிலிப் யங் கடந்த ஜனவரி மாதம் தனது முன்னாள் மனைவிக்கு எதிரான 50-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும், இவரது தூண்டுதலின் பேரில் ஜோன் யங்கை பாலியல் வன்கொடுமை செய்த 47 வயதான டீன் ஹாமில்டன் என்பவரும் கடந்த பிப்ரவரி மாதம் தன் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நான்கு நபர்களான நார்மன் மாக்சோனி (48), ரிச்சர்ட் வில்கின்ஸ் (62), கோனர் சாண்டர்சன் டாய்ல் (32) மற்றும் முகமது ஹசன் (38) ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தால் பாலியல் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். தற்போது குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வருகின்ற டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட உள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in