CRIME
“குடும்பம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அறுவை சிகிச்சை செய்…” காதலனுக்காகப் பெண்ணாக மாறிய திருநங்கைக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. நெஞ்சை உலுக்கும் துரோகம்..!!
தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த திரிவேந்திரா என்ற இளைஞருக்கும், திருநங்கை ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு ஆழமான காதலாக மாறியுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாகப் பழகி வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்தபோது, குடும்பத்தினரும் சமூகமும் தங்களின் உறவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு திரிவேந்திரா கூறியதாகத் தெரிகிறது.
காதலனின் வார்த்தைகளை முழுமையாக நம்பிய அந்தத் திருநங்கை, அவருடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் ஹார்மோன் சிகிச்சைகள், மார்பக அறுவை சிகிச்சை மற்றும் பாலின மாற்று அறுவை சிகிச்சை என அனைத்தையும் மேற்கொண்டுள்ளார். இதற்காகப் பெரும் தொகையைச் செலவிட்டதோடு மட்டுமல்லாமல், சொல்ல முடியாத அளவிற்குக் கடுமையான உடல் வலியையும் மன வேதனையையும் அவர் தாங்கிக்கொண்டுள்ளார்.
ஆனால், அனைத்துச் சிகிச்சைகளையும் முடித்துவிட்டுத் திருமணம் செய்து கொள்வதற்காகத் திரிவேந்திராவின் வீட்டிற்குச் சென்றபோது, அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது; திரிவேந்திரா ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் அப்போதுதான் தெரியவந்துள்ளது. காதலுக்காகத் தனது உடலையும் வாழ்க்கையையுமே மாற்றிக்கொண்ட அந்தத் திருநங்கை, இறுதியில் காதலனால் ஏமாற்றப்பட்டுத் தனிமையிலும், உடைந்த இதயத்துடனும் சமூகத்தில் தனக்கான இடத்தைத் தேடிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
