“ச்சீ சொந்த தாய்மாமனே செய்த காரியமா இது..?” நள்ளிரவில் மாயமான 14 வயது சிறுமி… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி.. 4 நாட்களுக்குப் பின் வெளியான பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ச்சீ சொந்த தாய்மாமனே செய்த காரியமா இது..?” நள்ளிரவில் மாயமான 14 வயது சிறுமி… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி.. 4 நாட்களுக்குப் பின் வெளியான பகீர் பின்னணி..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 14 வயது சிறுமியை அவரது தாய்மாமன் முறையானவரே கடத்திச் சென்று யாசகத்தில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் பெற்று வரும் மிடாலம் உதயமார்த்தாண்டம் நடுத்தேரி பகுதியைச் சேர்ந்த சரவணன், கடந்த நவம்பர் 15-ஆம் தேதி மாலை தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் குளச்சலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காணச் சென்றுள்ளார். நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு குடும்பத்தினர் வழக்கமாக இரவு நேரங்களில் தங்கும் குளச்சல் காவல் நிலையம் எதிரே உள்ள ஆவின் பாலகம் பகுதிக்குச் சென்றபோது, சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சரவணனின் 14 வயது மகள் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், மறுநாள் குளச்சல் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமியின் தாய்மாமன் முறையான இசக்கியப்பன் என்பவர் சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து அவரது செல்போன் சிக்னலைக் கண்காணித்து வந்த போலீசார், நான்கு நாட்களுக்குப் பிறகு டவர் லொக்கேஷன் உதவியுடன் அவர் கோவில்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதைக் கண்டறிந்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியைப் பத்திரமாக மீட்டதுடன், இசக்கியப்பனைப் பிடித்து குளச்சல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

Advertisement

போலீசாரின் தீவிர விசாரணையில், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இசக்கியப்பன், சிறுமியைக் கடத்திச் சென்று தனது தங்கை வீட்டில் அடைத்து வைத்திருந்ததும், சிறுமியை யாசகத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் கடத்திச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறுமியைக் கடத்திச் சென்று யாசகத்தில் ஈடுபடுத்த முயன்றது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த குளச்சல் போலீசார், இசக்கியப்பனைக் கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் மாவட்டச் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in