CRIME
திருமணத்திற்குத் தயாரான வீட்டில் அதிர்ச்சி.. 14 லட்சம் நகை, பணத்துடன் மாயமான மணப்பெண்.. பின்னணியில் அந்த இளைஞர்..? திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள உஸ்ரஹார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட குங்கும் என்ற இளம்பெண் தனது வீட்டிலிருந்து திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வீட்டை விட்டுச் செல்லும்போது, திருமணத்திற்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்த சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும், 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது மகள் மாயமானதற்கு அவருடன் பயிற்சி மையத்தில் ஒன்றாகப் படித்த இளைஞர் ஒருவரே காரணம் எனப் பெண்ணின் தந்தை வினோத் சந்தேகம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குங்கும் மாயமான அதே நேரத்தில் அந்த இளைஞரும் தனது வீட்டைப் பூட்டிவிட்டு மாயமாகியிருப்பது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இது குறித்துத் தந்தை வினோத் உஸ்ரஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மாயமான இளம்பெண்ணையும் அந்த இளைஞரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
