“என்னைப் புதைக்க வேண்டும்..” 35 ஆண்டுகளுக்கு முன் மனைவிக்கு அளித்த வாக்கை நிறைவேற்றக் கணவன் எடுத்த நெகிழ்ச்சி முடிவு..கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னைப் புதைக்க வேண்டும்..” 35 ஆண்டுகளுக்கு முன் மனைவிக்கு அளித்த வாக்கை நிறைவேற்றக் கணவன் எடுத்த நெகிழ்ச்சி முடிவு..கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவம்..!!

Published

on

காதலுக்கும் மரணத்திற்கும் மதம் கிடையாது என்பதை நிரூபிக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள கண்டௌலி சாய்ம்ரா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரைச் சேர்ந்த ருக்ஷானா என்ற இஸ்லாமியப் பெண், சாய்ம்ராவைச் சேர்ந்த மகேந்திர சிங் ஜாதவ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளத் தனது பெயரை மஞ்சு என மாற்றிக்கொண்டு இந்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். கடந்த 35 ஆண்டுகளாக மகேந்திராவின் அன்பு மனைவியாகவும், 12 குழந்தைகளின் தாயாகவும் இந்து முறைப்படி வாழ்ந்தபோதும், “நான் இறந்த பிறகு என்னைத் தகனம் செய்யாமல் புதைக்க வேண்டும்” என்பதே மஞ்சுவின் இறுதி ஆசையாக இருந்தது; அதற்கு மகேந்திராவும் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 55 வயதான மஞ்சு உடல்நலக்குறைவால் காலமானார்.

சனிக்கிழமை காலை உறவினர்களும் கிராம மக்களும் இந்து முறைப்படி உடலைத் தகனம் செய்ய ஏற்பாடு செய்தபோது, மகேந்திராவும் அவரது 12 குழந்தைகளும் அதற்கு மறுத்து, மஞ்சுவின் இறுதி ஆசைப்படி உடலைப் புதைப்பதில் உறுதியாக நின்றனர். இதற்காக இஸ்லாமிய மயானத்திற்குச் சென்று இடம்கேட்டபோது, “இங்கு முஸ்லிம்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படுவார்கள்” எனக் கூறி மயான நிர்வாகம் இரண்டு சதுர கஜம் நிலத்தைக் கூட வழங்க மறுத்துவிட்டது. இதனால் சற்றும் மனம் தளராத மகேந்திரா, தனது காதல் மனைவிக்கு அளித்த வாக்கை நிறைவேற்றும் விதமாகத் தனது சொந்த வயலிலேயே குழி தோண்டி மஞ்சுவின் உடலை நல்லடக்கம் செய்து அவரது இறுதி ஆசையை நிறைவேற்றினார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in