LATEST NEWS
“அடக்கடவுளே கேட்கவே பதறுது” பிறந்து 4 நாட்களே ஆன பெண் சிசுவை நாய்கள் கடித்துக் குதறிய கொடூரம்… காஞ்சிபுரம் அருகே நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி..!!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் ஊராட்சியில், நவம்பர் 18-ஆம் தேதி மாலை பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலத்தை நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் பொதுமக்கள் மீட்டுள்ளனர்.
கால்நடைகளை மேய்த்துவிட்டுத் திரும்பிய அப்பகுதி மக்கள், நாய்கள் கவ்விச் சென்ற சடலத்தை மீட்டு பெருநகர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் உடலைக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
குழந்தை உயிருடன் வீசப்பட்டதா அல்லது புதைக்கப்பட்ட உடலை நாய்கள் தோண்டி எடுத்ததா என்ற கோணத்தில் அப்பகுதி சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
