“மாயமான 8 வயது சிறுமி.. 5 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிப்பு..! ரயில் நிலையத்தில் சுற்றிய சிறுமிக்கு நடந்தது என்ன..? அதிர வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மாயமான 8 வயது சிறுமி.. 5 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிப்பு..! ரயில் நிலையத்தில் சுற்றிய சிறுமிக்கு நடந்தது என்ன..? அதிர வைக்கும் பின்னணி..!!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கருமாங்கழனி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாத் – கல்பனா தம்பதியரின் 8 வயது மகள் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த வெள்ளிக்கிழமை (அக் 16) வீட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. தாத்தா, பாட்டி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கினர். விசாரணையில் சிறுமி பூந்தமல்லி வழியாக சென்னை எழும்பூர் ரயில்வே நிலையத்திற்குச் சென்றது தெரியவந்தது.

எழும்பூர் ரயில்வே நிலையத்தில் வழி தெரியாமல் சுற்றித்திரிந்த சிறுமியை சனிக்கிழமை காலை ரயில்வே போலீசார் மீட்டு கெல்லீஸில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். காப்பகத்திற்குச் சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு சிறுமியை அடையாளம் கண்டு உறுதிப்படுத்திய பின், மனநல ஆலோசனைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தார். காணாமல் போன சிறுமி பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியதுடன் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கைக்குப் பாராட்டும் பெற்றுத் தந்துள்ளது.

Advertisement

இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவம் கடந்த 10 நாட்களாகத் தொடரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சிறுமியைக் கண்டறியும் தேடுதல் பணிகளை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in