LATEST NEWS
அடக்கொடுமையே..! வீட்டில் கட்டிய சேலை ஊஞ்சலே எமனானது.. கழுத்து இறுக்கி 6-ம் வகுப்பு மாணவி துடிதுடித்து உயிரிழப்பு.. கதறி துடிக்கும் பெற்றோர்..!!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில், வீட்டில் கட்டப்பட்டிருந்த சேலை ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணவி கழுத்து இறுக்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோவூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் 12 வயது மகள் கனிஷ்கா, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தார். இவரது 6 வயது தம்பி சிசாந்த் தூங்குவதற்காக வீட்டில் சேலையால் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த ஊஞ்சலில் கனிஷ்கா ஆடி விளையாடியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாகச் சேலை கனிஷ்காவின் கழுத்தில் இறுக்கியதால், மூச்சு விட முடியாமல் அவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மாங்காடு போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்காகக் கட்டப்பட்ட ஊஞ்சலே சிறுமியின் உயிரைப் பறித்த இந்தத் துயரச் சம்பவம், பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
