“ஆட்சியைக் கலைச்சிடுங்க..!” -அரசியலமைப்புச் சட்டம் 356-ஐ கையில் எடுத்த அண்ணாமலை தரப்பு… ஆளுநர் மாளிகையில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆட்சியைக் கலைச்சிடுங்க..!” -அரசியலமைப்புச் சட்டம் 356-ஐ கையில் எடுத்த அண்ணாமலை தரப்பு… ஆளுநர் மாளிகையில் பரபரப்பு..!!

Published

on

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறையாகப் பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டி, தமிழக ஆளுநரிடம் ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையின் அந்த அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் அபிலாஷ் கோபிநாதன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், நவம்பர் 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி நவம்பர் 24 அன்று தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 355 மற்றும் 356-ன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பதை ஆளுநர் ஆராய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசைக் கலைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாதது குறித்து முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக அரசிடம் இருந்து ஆளுநர் உரிய விளக்கத்தைக் கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் கூறி உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in