பகீர்.. கணவனுக்குத் தெரியாமல் ரகசிய சந்திப்பு…… எல்லை மீறிய ஆசையால் தோப்பில் நடந்த கொடூரம்.. மாயமான பெண்ணின் திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்.. கணவனுக்குத் தெரியாமல் ரகசிய சந்திப்பு…… எல்லை மீறிய ஆசையால் தோப்பில் நடந்த கொடூரம்.. மாயமான பெண்ணின் திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நபரை நேரில் சந்திக்கச் சென்ற இரண்டு குழந்தைகளின் தாய், ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுப் பண்ணை நிலத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான பிரீத்தி என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி பிரீத்தி மாயமானதாக அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பிரீத்தி சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலமாகப் புனீத் என்ற நபருடன் பழகி வந்ததைக் கண்டறிந்தனர்.

ஆன்லைன் சாட்டிங் மற்றும் போன் அழைப்புகள் மூலம் நெருக்கமான இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்து, ஹாசனிலிருந்து வாடகைக் காரில் மைசூருக்குச் சென்றுள்ளனர். அங்குக் கிருஷ்ண ராஜா சாகர் அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், பிரீத்தி மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் தயக்கம் காட்டிய புனீத், கே.ஆர். பேட்டை அருகே உள்ள கட்டரகட்டா வனப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த புனீத் பிரீத்தியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரீத்தியை, அங்கிருந்த பெரிய கல்லால் தலையில் ஓங்கி அடித்துப் புனீத் சம்பவ இடத்திலேயே கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

Advertisement

கொலைக்குப் பிறகு பிரீத்தியின் உடலைத் தனது சொந்த கிராமமான கரோட்டிகிராமத்திற்குக் கொண்டு சென்ற புனீத், யாருக்கும் தெரியாமல் தனது பண்ணை நிலத்தில் புதைத்துள்ளார். தீவிர விசாரணையில் புனீத்தைக் கைது செய்த காவல்துறையினர், அவர் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து பிரீத்தியின் உடலை மீட்டனர்; பின்னர் அவரது கணவர் உடலை உறுதி செய்தார். சமூக வலைதளத்தில் ஏற்பட்ட பழக்கம் முதல் சந்திப்பிலேயே கொடூரக் கொலையில் முடிந்த இச்சம்பவம் அப்பகுதியில் இன்றளவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in