CRIME
“கருக்கலைப்பு செய்ய யூடியூப் சொன்ன விபரீத ஐடியா…” உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடும் 28 வயது பெண்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில், யூடியூப் வீடியோவைப் பார்த்து சுயமாகக் கருக்கலைப்பு செய்ய முயன்ற கர்ப்பிணிப் பெண், ஊமத்தங்காயைச் சாப்பிட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹத்ராஸ் சந்திப்பு பகுதியில் உள்ள ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர் மீண்டும் இரண்டு மாத கர்ப்பமடைந்துள்ளார்.
ஐந்தாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பாத அப்பெண், மருத்துவர்களின் ஆலோசனையின்றிச் சுயமாகக் கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்காக யூடியூபில் வீடியோ ஒன்றைப் பார்த்த அவர், அதில் கூறப்பட்டிருந்ததை நம்பி விஷத்தன்மை கொண்ட ஊமத்தங்காயை சாப்பிட்டுள்ளார். ஊமத்தங்காயைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அப்பெண்ணுக்குக் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டு நிலைமை மோசமடைந்தது. இதையடுத்துப் பதறிப்போன குடும்பத்தினர், அவரை உடனடியாக ஹத்ராஸ் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக அலிகார் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்து அனுப்பி வைத்துள்ளனர்.சமூக வலைதளங்களில் வரும் மருத்துவ ஆலோசனைகளை எந்தவிதப் புரிதலுமின்றிப் பின்பற்றுவது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
