LATEST NEWS
அமமுகவில் நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. காமராஜ் தவெகவில் ஐக்கியமாகிறார்..? – செய்தியாளர்கள் சந்திப்பில் உடைத்த உண்மை.. அதிர்ச்சியில் டிடிவி..!
சூழ்நிலை வரும்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவேன் என மன்னார்குடி தொகுதி அமமுக எம்.எல்.ஏ. எஸ். காமராஜ் தெரிவித்துள்ளார்.
தவெகவில் இணைவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதினால்தான் தனது தொகுதியில் நிறையத் திட்டங்களை நிறைவேற்ற முடிந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், தவெகவில் இணையத் தனக்கு எந்தவித நெருக்கடியும் கிடையாது என்றும், எந்த நெருக்கடியும் தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தற்போது தான் ஒரு தனி எம்.எல்.ஏ-வாகச் செயல்பட்டு வருவதாகக் கூறிய எஸ். காமராஜ், எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக எந்தவொரு முடிவை எடுத்தாலும், அது குறித்து அனைவரிடமும் முறையாகத் தெரிவித்துவிட்டுத்தான் எடுப்பேன் என விளக்கமளித்துள்ளார்.
