LATEST NEWS
“116 நாட்களாகத் தூங்கிட்டு இருந்தாரா..?” FIR போட ஏன் தாமதம்…? முதல்வர் விஜய்யை நேரடியாகச் சாடிய உதயநிதி ஸ்டாலின்..!!
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்படாதது குறித்துத் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் அரசு மிகுந்த தாமதம் காட்டியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது FIR போடாமல் 116 நாட்களாக இந்த டம்மி முதலமைச்சர் தூங்கிக்கொண்டு இருந்தாரா?” என்று முதலமைச்சர் விஜய்யை நோக்கி நேரிடையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
