LATEST NEWS
ஆதவ் அர்ஜுனாவிடம் தோல்வி.. கொளத்தூரில் களமா..? திமுக வட்டாரத்தில் நடக்கும் முக்கிய ஆலோசனை.. ஸ்டாலின், கனிமொழியைத் தொடர்ந்து அடிபடும் புதிய பெயரால் பரபரப்பு..!!
கொளத்தூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக கார்த்திக் மோகனை களமிறக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2026 தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட இவர், சுமார் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் தோல்வியடைந்தார்.
இத்தேர்தல் வேட்பாளர் பட்டியலுக்கான போட்டியில் ஏற்கனவே ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வரும் சூழலில், தற்போது கார்த்திக் மோகனின் பெயரும் அதில் இணைந்துள்ளது.
வில்லிவாக்கத்தில் தோல்வியடைந்த கார்த்திக் மோகன் கொளத்தூர் இடைத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
