DEVOTIONAL
“பணமழை கொட்டப்போகுது..” சிம்ம ராசியில் நிகழும் அரிய கிரகச் சேர்க்கை… ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்..! உங்க ராசி இதுல இருக்கா..?!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்கள் தங்களது பயணத்தின்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணையும்போது பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது. அந்த வகையில், சூரியனின் ஆதிக்கம் கொண்ட சிம்ம ராசியில் ஏற்கனவே குருவும் கேதுவும் சஞ்சரித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் 12 அன்று செவ்வாயும் அந்த ராசிக்குள் நுழைந்து செவ்வாய், குரு, கேது ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றிணைந்து சக்திவாய்ந்த திரிகிரக யோகத்தை உருவாக்கியுள்ளன. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை டிசம்பர் 5ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த அரிய கிரகச் சேர்க்கையால் அனைத்து ராசிகளிலும் சில தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாகக் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்குத் தொழில், வியாபாரம், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் சாதகமான சூழலைக் கொடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சிம்ம ராசியில் செவ்வாய், குரு பகவான், கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை கடக ராசியினருக்குத் தொழில் மற்றும் நிதி ரீதியாகச் சாதகமான பலன்களைக் கொடுக்கும்; நீண்டகாலமாக நிதிச் சிக்கல்களைச் சந்தித்தவர்களுக்கு நிம்மதி கிடைப்பதுடன், புதிய வருமான வாய்ப்புகளும், முதலீடுகள் மூலம் லாபமும் கிடைக்கும், பணியிடத்தில் உழைப்புக்கான அங்கீகாரம், மரியாதை மற்றும் நற்பெயர் அதிகரிக்கும், வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்களும், தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம், தடைப்பட்ட திட்டங்கள் மீண்டும் தொடங்குவதுடன், ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும். அதேபோல, சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரஹி யோகம் துலாம் ராசியினரின் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்; வேலை தேடும் இளைஞர்களுக்குத் தகுதியான வேலை கிடைக்கவும், வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்களுக்குச் சாதகமான செய்திகள் வந்துசேரும், ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கலாம், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிப்பதுடன், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணமும் கைக்கு வரும், முக்கியத் திட்டங்களில் முன்னேற்றம் ஏற்பட்டு, தன்னம்பிக்கையும் வெற்றியும் அதிகரிக்கும்.
டிசம்பர் 5ஆம் தேதி வரை உள்ள காலம் விருச்சிக ராசியினருக்குப் பல்வேறு வகைகளில் சாதகமான மாற்றங்களையும் வெற்றிகளையும் கொடுக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன், உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில்முனைவோருக்குப் பெரிய ஒப்பந்தங்கள் கிடைத்து, நிதிநிலை மேம்பட வாய்ப்புள்ளது; புதிய வருமான வழிகள் உருவாகுவதுடன், நிதி ஆதாயமும் பெருகும், மேலும் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்புகளும் அமையும்.
