DEVOTIONAL
அடேங்கப்பா..! 56 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய ராஜயோகம்.. குரு பூர்ணிமா நாளில் இந்த 3 ராசிகளுக்கு காத்திருக்கும் மகா அதிர்ஷ்டம்.. உங்க ராசி இதில் இருக்க..!!
வேத காலக் கணக்கீட்டின் அடிப்படையில், இந்த வருடத்தின் குரு பூர்ணிமா திருநாளில் புதாதித்ய, ஹன்ஸ் மற்றும் சச ஆகிய மூன்று சக்தி வாய்ந்த மங்களகரமான யோகங்கள் ஒரே நேரத்தில் கூடிவந்துள்ளன. ஏறத்தாழ 56 வருடங்களுக்குப் பின் அரங்கேறும் இந்த அபூர்வமான வானியல்-ஜோதிட அற்புதத்தால் ஒட்டுமொத்த ராசிகளுமே நன்மைகளை அடைந்தாலும், அதிலும் குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் அபரிமிதமான அதிர்ஷ்டத்தையும் அசுர வளர்ச்சியையும் காணப் போகிறார்கள்.
ரிஷபம்
குரு பூர்ணிமா நாளில் உருவாகும் இந்த மூன்று ராஜயோகங்களின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலம் அமையும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். தொழிலதிபர்களுக்கு வளர்ச்சியை நோக்கி புதிய வாய்ப்புகள் உருவாகுவதோடு, புதிய முதலீடுகளை செய்ய நினைப்பவர்களுக்கும் இது சிறந்த நேரமாகும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதோடு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன.
கும்பம்
இந்த ராஜயோகங்களின் பலனால் கும்ப ராசிக்காரர்கள் பணியிடத்தில் சந்தித்து வந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பார்கள். அனுபவம் வாய்ந்த பெரியவர்களின் ஆலோசனையைப் பின்பற்றினால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கி, பல்வேறு வழிகளில் இருந்து பண வரவு அதிகரிக்கும். மேலும், நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருப்பதுடன், திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
மகரம்
குரு பூர்ணிமா நாளில் உருவாகும் இந்த மூன்று ராஜயோகங்கள் மகர ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கு உரிய பலனைத் தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாவதுடன், நிதி ரீதியாகவும் சிறப்பான பலன்கள் காணப்படும். முன்பு செய்த முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதன் மூலம் உங்கள் நிதி நிலையும் மேலும் வலுவடையும்.
