DEVOTIONAL
“அப்படி போடு..! ஆகஸ்ட் 7 சூரியன் – சனி நவபஞ்சம யோகம்… இந்த 4 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயம்.. உங்க ராசி இருக்கானு பாருங்க..!!
ஜோதிடக் கணிப்புகளின்படி, ஆகஸ்ட் 7 அன்று சூரியன் மற்றும் சனி பகவானின் பார்வை சேர்க்கையால் நவபஞ்ச திருஷ்டி யோகம் தோன்றுகிறது. வழக்கமாக சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும்போது வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நிகழும். சூரியன் ஒருவருக்கு கம்பீரத்தையும் தன்னம்பிக்கையையும் தரும் வேளையில், சனி பகவான் நியாயத்தையும், உழைப்பிற்கான பலனையும் வழங்குபவர். இவர்கள் இருவரும் 5 மற்றும் 9 ஆகிய திரிகோண வீடுகளில் இருந்து ஒன்றையொன்று பார்க்கும் இந்த அபூர்வ சேர்க்கை, பலருக்கு நேர்மறை மாற்றங்களையும் தொழிலில் புதிய உயர்வையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்மம் ராசி
அபரிமிதமான நன்மைகளைப் பெறவுள்ளனர். சிம்ம ராசியினருக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும்; வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவோடு பதவி உயர்வும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும்.
துலாம் ராசி
நீண்ட நாள் முயற்சிகளுக்குத் தகுந்த பலன் கிடைக்கும். தொழில் மாற்றத்தை விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமைவதுடன், வருமானமும் சேமிப்பும் அதிகரிக்கும்.
மகரம் ராசி
இந்த யோகம் தொழிலிலும் நிதி நிலையிலும் சிறப்பான யோகத்தைத் தரும். மகர ராசியினருக்கு அவர்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம், ஊதிய உயர்வு மற்றும் புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
கும்ப ராசி
தொழில் போட்டிகள் நீங்கி, நீண்ட நாட்களாகச் சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஒட்டுமொத்தமாக, இந்த நான்கு ராசியினருக்கும் தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் பெரும் சுபிட்சத்தைத் தரக்கூடியதாக இந்த ஆகஸ்ட் மாத நவபஞ்ச யோகம் அமையவுள்ளது.
