DEVOTIONAL
“பக்தர்களே உஷார்… அம்மன் கோவிலில் மறந்தும் இந்த 5 தவறுகளைச் செய்யாதீங்க.. அப்புறம் அருள் கிடைக்காது.. உடனே தெரிஞ்சுக்கோங்க..!!”
அம்மன் அருள் பெற செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மிக உகந்த நாட்களாகக் கருதப்படுகின்றன. ஆடி மாதத்தில் மட்டுமல்லாமல், வருடம் முழுவதுமே இந்நாட்களில் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது தமிழ் மக்களின் தொன்மையான பண்பாடாகும். இவ்வாறு கோவிலுக்குச் சென்று அன்னையின் அருளைப் பெறும்போது, சில குறிப்பிட்ட வழிபாட்டு முறைகளையும் ஆன்மிக விதிகளையும் பின்பற்றுவது சிறப்பு.குறிப்பாக, கோவிலுக்குள் நுழையும் போது காவல் தெய்வங்கள் உறைவதாகக் கருதப்படும் வாசல் படியை மிதிக்காமல் தாண்டிச் செல்ல வேண்டும். அதேபோல், மாரியம்மன், காளியம்மன், துர்க்கை போன்ற அம்பிகையின் திருவுருவங்களை கண்களை மூடாமல், நேரடியாகத் தரிசித்து மனதார வழிபட வேண்டும்.
அம்மன் கோவிலில் வேண்டுதலுக்காக ஏற்றப்படும் எலுமிச்சை பழ விளக்கை பிரகாரத்தில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் மட்டுமே ஏற்ற வேண்டும். கோவில் கொடிமரம், பலிபீடம் மற்றும் ராஜகோபுரம் ஆகியவற்றின் நிழல்களை மிதிப்பது தவிர்க்கப்பட வேண்டும். மேலும், அம்பாள் சன்னதியை ஆகம விதிகளுக்கு மாறாகத் தவறான திசையில் வலம் வரக்கூடாது; மாறாக, வலப்புறமாக 5 முறை வலம் வந்து வழிபடுவதே சிறப்பானது என்ற நம்பிக்கை நிலவுகிறது.
