LATEST NEWS
பதவிக்கு ரூ.12.5 லட்சம்… 10 நாளில் ஆர்டர் வந்திரும்… சம்பாதிக்க வேற ஐடியா இருக்கு… தவெக பெண் வழக்கறிஞரிடம் லஞ்சம் கேட்ட நிர்வாகி.. ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சி..!!
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அரசு வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சப் புகார்கள் எழுந்து நீதிமன்றம் வரை சென்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஆடியோ உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரிடம், தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஷ் என்பவர் அரசு வழக்கறிஞர் பதவிக்காக பேரம் பேசும் இந்த உரையாடல் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
அந்த ஆடியோவில், இரணியல் மற்றும் தக்கலை நீதிமன்றங்களில் பணிபுரியும் ஏழு ஆண்டுகள் அனுபவமுள்ள பெண் வழக்கறிஞர் அரசு வழக்கறிஞர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கிறார். அதற்கு அனீஷ், “டிவிேக உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அளிக்கப்படும். ₹15 லட்சம் கொடுத்தால் 10 நாட்களில் நியமன உத்தரவு வந்துவிடும்” என்று கூறுகிறார். அவ்வளவு பணம் இல்லை என்று பெண் வழக்கறிஞர் கூறவே, தொகையை ₹12.50 லட்சமாக குறைத்து பேரம் பேசுகிறார்.
மேலும், அந்தப் பதவியைப் பயன்படுத்தி எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதையும் அனீஷ் விளக்குகிறார். “கடந்த ஆட்சியில் நிலப் பதிவுகள் நிலுவையில் உள்ளன; பத்திரப்பதிவு தொடர்பாக அரசு வழக்கறிஞரிடம் கருத்துரு கேட்கும்போது தாராளமாகச் சம்பாதிக்கலாம். கொடுத்த பணத்தை சீக்கிரமே எடுத்துவிடலாம்” என்று ஆசைகாட்டுகிறார். அதற்கு அந்த பெண் வழக்கறிஞர், “பணம் சம்பாதிப்பது எனது நோக்கமல்ல; கட்சிப் பணியாற்றி ஆர்வமுடன் சேவை செய்யவே விரும்புவதால் இந்தத் தொகை மிக அதிகம்” என்று பதிலளிக்கிறார்.
கட்சிக்கு நற்பெயர் கெடுக்கும் வகையில் லஞ்ச பேரத்தில் ஈடுபட்ட இந்த உரையாடல் தற்போது தவெக தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர
