பெற்றோர்களுக்கு தெரியாமல்.. குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்கப்பட்ட கொடூரம்… ரயில் நிலையங்களை குறி வைக்கும் கடத்தல் மாஃபியாக்களின் அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெற்றோர்களுக்கு தெரியாமல்.. குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்கப்பட்ட கொடூரம்… ரயில் நிலையங்களை குறி வைக்கும் கடத்தல் மாஃபியாக்களின் அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ரயில் நிலையத்திற்கு வெளியே கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதோடு, குழந்தைகளைக் கடத்தி பிச்சை எடுக்க வைக்கும் அதிர்ச்சி ஊட்டும் கும்பலையும் போலீசார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தாய் ஒருவர், கடந்த செப்டம்பர் 24 அன்று தனது மகனுடன் ஊருக்குத் திரும்புவதற்காக ராஞ்சி ரயில் நிலையம் வந்தபோது, அந்தச் சிறுவன் திடீரென மாயமானான். இதுகுறித்து அவரது தாய் சுட்டியா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

போலீசார் தங்களது தொழில்நுட்ப புலனாய்வு மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதலில் தன்வாத் ரயில் நிலையம் அருகே ஒரு கடத்தல்காரனைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் கிடைத்த முக்கியத் துப்புகளின் அடிப்படையில், சாஹிப்கஞ்ச் மாவட்டத்தின் தீன்பஹார் பகுதியில் போலீசார் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்த அதிரடிச் சோதனையின் போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 வயது சிறுவன் எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டான். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர். இந்த மெகா ஆபரேஷனில் ராஞ்சி போலீசாருடன் தன்வாத், ஜாம்தாரா மற்றும் சாஹிப்கஞ்ச் மாவட்ட போலீசாரும் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இந்த பயங்கர கும்பலிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிரவைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த கும்பல் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இருக்கும் சிறிய குழந்தைகளைக் குறிவைத்து கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு கடத்தப்படும் குழந்தைகளைத் தீன்பஹார் பகுதியில் வெவ்வேறு இடங்களில் அடைத்து வைத்து, அவர்களைப் பிச்சை எடுக்கவும், இதர குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்ட 5 குற்றவாளிகளிடமும் இந்த கும்பலின் முழு நெட்வொர்க் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in