“கேமராவ ஆஃப் பண்ணு… யார்கிட்ட கேட்டு வீடியோ எடுக்குற..?” ரயில்வே ஸ்டேஷனில் ரீல்ஸ் எடுத்த வ்லாகர்.. அலேக்காகத் தூக்கிய போலீஸ்..! வைரல் வீடியோவால் இணையத்தில் வெடித்த விவாதம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கேமராவ ஆஃப் பண்ணு… யார்கிட்ட கேட்டு வீடியோ எடுக்குற..?” ரயில்வே ஸ்டேஷனில் ரீல்ஸ் எடுத்த வ்லாகர்.. அலேக்காகத் தூக்கிய போலீஸ்..! வைரல் வீடியோவால் இணையத்தில் வெடித்த விவாதம்..!!

Published

on

பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அனுக்கிரஹ் நாராயண் ரோடு ரயில் நிலையத்தில், சுபோத் குமார் என்ற வ்லாகர் ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். “ரயில் வந்துவிட்டது, அனைவரும் கவனமாக ஏறுங்கள்” என்று அவர் பயணிகளுக்கு வீடியோ மூலம் அறிவுறுத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது, அங்கிருந்த காவலர் ஒருவர் அவரிடம் வந்து, “வீடியோ எடுக்க யார் அனுமதி கொடுத்தது?” என்று கேட்டு, அந்த வீடியோவை உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட்டார்.

ரயில் நிலையத்தில் வீடியோ எடுக்கத் தடை இல்லை என்று நினைத்த அந்த வ்லாகர், வீடியோவை அழிக்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த காவலர் அவரைப் பிடித்து, மற்றொரு காவலரிடம் ஒப்படைத்தார். இருப்பினும், தகுந்த ரயில் டிக்கெட்டோ அல்லது பிளாட்பாரம் டிக்கெட்டோ இல்லாமல், எந்த அனுமதியும் இன்றி அவர் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்பதற்கு அந்த வ்லாகரிடம் பதில் எதுவும் இல்லை.

Advertisement

https://www.instagram.com/reel/DfE_zQ9TqcP/?utm_source=ig_web_button_share_sheet

பொதுவான பாதுகாப்பு விதிகளின்படி, வணிக நோக்கத்திற்கோ அல்லது திரைப்படப் படப்பிடிப்பிற்கோ இல்லையென்றால், சாதாரண பயணிகள் தங்கள் பயண நினைவுகளுக்காக ரயில் நிலையத்தில் வீடியோ எடுப்பது முற்றிலுமாகத் தடை செய்யப்படவில்லை. ஆனால், அதற்குச் செல்லுபடியாகும் ரயில் டிக்கெட் அல்லது பிளாட்பாரம் டிக்கெட் வைத்திருக்க வேண்டும். மேலும், ரயிலுக்குள் பிற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றமாகும்; அவ்வாறு செய்தால் ரயில்வே அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in