“எல்லை மீறாதீங்க…” அமைச்சரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய முதல்வர் விஜய்.. நேரில் முகம் கொடுத்துக் கூடப் பேசாமல் காட்டிய உச்சக்கட்ட கோபம்… வெளியான பகீர் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எல்லை மீறாதீங்க…” அமைச்சரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய முதல்வர் விஜய்.. நேரில் முகம் கொடுத்துக் கூடப் பேசாமல் காட்டிய உச்சக்கட்ட கோபம்… வெளியான பகீர் தகவல்..!!

Published

on

தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சரும், அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காந்திராஜ், தனது தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் மற்றும் தக்கோலம் காவல் நிலையங்களில் நள்ளிரவில் மேற்கொண்ட திடீர் ஆய்வு தற்போது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின்போது காவல் நிலையப் பதிவேடுகளைப் பார்வையிட்ட அமைச்சர், பணியிலிருந்த பெண் காவலரின் தனிப்பட்ட செல்போனை வாங்கிச் சோதனையிட்டதாகவும், சீருடை அணியாதது குறித்துக் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, காவல் நிலையத்திற்குள் நடந்த இந்த ஆய்வு நிகழ்வுகளை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்டது அரசியல் வட்டாரத்திலும் காவல்துறையினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அமைச்சரின் இந்தச் செயல்பாட்டிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உள்துறை நிர்வாகம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Advertisement

இதற்கிடையே, தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கும் இது தொடர்பாகப் பல புகார்கள் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்வாக விதிகளின்படி, ஒரு அமைச்சர் தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் கீழ் வரும் அலுவலகங்களை மட்டுமே ஆய்வு செய்ய முடியும் என்றும், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையின் கீழ் வரும் காவல் நிலையங்களை ஆய்வு செய்யக் கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு அதிகாரமில்லை என்றும் ஐ.பி.எஸ். வட்டாரங்கள் தரப்பில் முதலமைச்சர் விஜய்க்குக் கடிதம் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சரின் அதிகார வரம்பிற்குள் அமைச்சர் தலையிடுவது சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவர் அமைச்சர் காந்திராஜைத் தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்ததுடன், தமது துறை சார்ந்த பணிகளைத் தாண்டி பிற துறைகளில் தலையிடக் கூடாது எனக் கண்டித்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதன் தொடர்ச்சியாக, மறைந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கிருந்த அமைச்சர் காந்திராஜைத் தவிர்த்ததாகக் கட்சியினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. முதலமைச்சருக்கு அருகில் சென்று வணக்கம் தெரிவித்துப் பேச முயன்ற அமைச்சரிடம், விஜய் முகம் கொடுத்துக் கூடப் பேசவில்லை என்று நேரில் பார்த்த வட்டாரங்கள் தெரிவிப்பதால், இந்தச் சம்பவம் ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in