LATEST NEWS
“புதிய கீதைன்னு” ஒரு மொக்கை படத்துல நடிச்சி.. ஐஸ்கிரீம் வேனில் ₹700 கோடி ஹெராயின்… போ** மாநிலமா ஆகிட்டாரா..? முதல்வர் விஜய்யை வச்சு செய்த திமுக இளைஞரணி..!!
சென்னை மாதவரத்தில் ஐஸ்கிரீம் வேனில் கடத்த முயன்ற ₹700 கோடி மதிப்பிலான 71.24 கிலோ ஹெராயினை ஒன்றிய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தாம்பேட்டமைன் சிக்கிய நிலையில், தமிழகம் சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் வழித்தடமாக மாறிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக திமுக இளைஞரணி தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசின் பங்களிப்பு ஏதுமில்லை என்றும், நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.பி.எல் மைதானத்தில் அமைச்சர் சரத் தொடர்பாக வெளியான சர்ச்சைக் காணொளியைச் சுட்டிக்காட்டி, பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதே சர்ச்சைகள் எழுவதால் ஆட்சி நிர்வாகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கழக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்த த.வெ.க தலைவர் விஜய், தற்போது தன் ஆட்சியில் அடுத்தடுத்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுவது குறித்து மௌனம் காப்பது ஏன் என திமுக இளைஞரணி கேள்வி எழுப்பியுள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் தன் கட்சி நிர்வாகியே சம்பந்தப்பட்டிருப்பது பற்றியும், தமிழ்நாடு காவல்துறை கோட்டைவிட்ட நிலையில் ஒன்றிய அரசின் அமைப்புகள் போதைப்பொருளைக் கைப்பற்றுவது குறித்தும் முதல்வர் விஜய் வாய் திறக்காமல் இருப்பதைக் கடுமையாகச் சாடியுள்ளது.
‘புதிய கீதை’ என்னும் மொக்கை படத்தில் நடித்த முதல்வர் விஜய், தமிழ்நாட்டு அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் ஏதோ புதிய பாதையைக் காட்டப்போகிறார் என்று மக்கள் ஏமாந்து வாக்களித்துவிட்டார்கள் என அந்தப் பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் தலைமையிலான த.வெ.க அரசு புதிய பாதையைக் காட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் தமிழ்நாட்டை ‘புதிய போதை’ மாநிலமாக மாற்றுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று திமுக இளைஞரணி தெரிவித்துள்ளது.
