“அன்பில் மகேஸைத் தொடர்ந்து எ.வ.வேலு..?” ரூ.5,000 கோடி கோடி மெகா ஊழல்.. ஆதவ் அர்ஜுனா திரட்டிய முக்கிய ஆதாரம்.. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அன்பில் மகேஸைத் தொடர்ந்து எ.வ.வேலு..?” ரூ.5,000 கோடி கோடி மெகா ஊழல்.. ஆதவ் அர்ஜுனா திரட்டிய முக்கிய ஆதாரம்.. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

Published

on

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்பட்ட ‘பேட்ச் வொர்க்’ சாலைப் பராமரிப்புப் பணிகள் வாயிலாக சுமார் ரூ.5,000 கோடி அளவிற்கு மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகாரில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை கைது செய்ய மாநில அரசு தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக தற்போதைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விரிவான ஆதாரங்களைத் திரட்டியுள்ளதாகவும், தற்போது இவ்வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் தீவிர விசாரணையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, எ.வ.வேலுவுக்குத் தொடர்புடைய இடங்களில் விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தனியார் நாளிதழ் ஒன்றில் பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ₹400 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த வரிசையில், தற்போது நெடுஞ்சாலைத் துறை முறைகேடு புகாரில் சிக்கியுள்ள எ.வ.வேலு மீதும் அடுத்தகட்டமாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாய உள்ளன என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in