LATEST NEWS
BREAKING: தமிழ்நாட்டில் மீண்டும் மிகப்பெரிய மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல்.. மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிரடி..!!
தமிழ்நாட்டில் மீண்டும் மிகப்பெரிய மதிப்பிலான போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாதவரம் பகுதியில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, சுமார் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சிக்கியுள்ளது.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக போதைப்பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதில் ஈடுபட்ட இருவரைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். தற்போது பிடிபட்ட இருவரிடமும் இந்தப் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது மற்றும் இதன் பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளிகள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
