அடக்கடவுளே..! குடிப்பழக்கத்தை மறக்க மூலிகைக் கஷாயம் குடித்த 2 பேர் துடிதுடித்து பலி… 5 பேர் உயிருக்குப் போராட்டம்.. பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே..! குடிப்பழக்கத்தை மறக்க மூலிகைக் கஷாயம் குடித்த 2 பேர் துடிதுடித்து பலி… 5 பேர் உயிருக்குப் போராட்டம்.. பெரும் பரபரப்பு..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் பெத்துல் மாவட்டம் சிச்சோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படாக்கேடா கிராமத்தில், மதுப்பழக்கத்தை மறக்க வைப்பதாகக் கூறி வழங்கப்பட்ட மூலிகைக் கஷாயத்தைக் குடித்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக ஏழு பேர் அங்கு சென்றிருந்த நிலையில், அவர்களுக்கு ஏதோ ஒரு தாவரத்தின் வேரை ஊறவைத்துத் தயாரிக்கப்பட்ட சிவப்பு நிறத் திரவ மருந்து வழங்கப்பட்டுள்ளது.

அந்தக் கஷாயத்தைக் குடித்த சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் திடீரென வாந்தி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 34 வயதான ராம்கிஷோர் ஜாடே மற்றும் 22 வயதான சஞ்சய் உய்கே ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும், மோகன் அம்ருதே, ராகேஷ் உய்கே, விஜய் உய்கே, ராம்தாஸ் அஹாகே உள்ளிட்ட ஐந்து பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

சம்பவ இடத்திலிருந்து அந்த வேர் பொடி மற்றும் சிவப்பு நிறத் திரவத்தைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், அவற்றை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஓஜா பர்தே, சரத் கவடே மற்றும் ரமேஷ் உய்கே ஆகிய மூன்று நபர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களைக் காவல்துறையினர் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in