“அய்யயோ.. இது சோப்பு நுரையல்ல..” யமுனை ஆற்றில் உயிரைப் பணயம் வைத்து விளையாடிய சிறுவர்கள்.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யயோ.. இது சோப்பு நுரையல்ல..” யமுனை ஆற்றில் உயிரைப் பணயம் வைத்து விளையாடிய சிறுவர்கள்.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ள யமுனை ஆற்றில், பனிபோலப் படர்ந்திருந்த வெள்ளை நிற நுரையில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் ரசாயனங்கள் கலப்பதால் உருவாகும் இந்த அடர்த்தியான நுரையைப் பார்ப்பதற்கு ஏதோ சோப்பு நுரை அல்லது பனிக்கட்டி போலத் தெரிவதால், அதன் ஆபத்தை உணராத சிறுவர்கள் அதற்குள் இறங்கி விளையாடியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்து வருகின்றனர். “விளையாடுவதற்கு இது ஒன்றும் சாதாரண சோப்பு நுரையல்ல. இது உடலில் கடுமையான அரிப்பு, தோல் நோய்கள் மற்றும் ஆறாத காயங்களை ஏற்படுத்தக்கூடிய கொடிய நச்சு நுரை” எனப் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த நச்சு நுரைப் பிரச்சனைக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in