“தீபாவளி நாளில் நேர்ந்த கொடூரம்..” போலீஸ் வண்டியை பார்த்ததும் பயந்து குளத்தில் குதித்த 4 சிறுவர்கள்.. 3 பேர் பரிதாப பலி..! பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தீபாவளி நாளில் நேர்ந்த கொடூரம்..” போலீஸ் வண்டியை பார்த்ததும் பயந்து குளத்தில் குதித்த 4 சிறுவர்கள்.. 3 பேர் பரிதாப பலி..! பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

மத்திய பிரதேச மாநிலம் ஷஹடோல் பகுதியில் தீபாவளி பண்டிகையின் போது ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌபாட்டி பகுதிக்கு பின்புறம் உள்ள குளத்தின் அருகே நான்கு சிறுவர்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு காவல் துறையின் ரோந்து வாகனம் வந்துள்ளது. போலீஸ் வாகனத்தைக் கண்டதும் பயமடைந்த அந்த நான்கு சிறுவர்களும் குளத்தில் குதித்துள்ளனர். இதில் சமீரா, கௌரவ் மற்றும் துர்கேஷ் ஆகிய மூன்று சிறுவர்கள் ஆழமான நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நான்காவது சிறுவனான பங்கஜ் என்பவர் எப்படியோ நீந்தி கரை சேர்ந்து உயிர்தப்பினார். தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் மூன்று சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உடல்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உடனடியாக ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படவில்லை என்றும், மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் கூட கிடைக்காததால் உடல்களை துணியில் சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் உறவினர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டினர். மேலும் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அலட்சியப்போக்கைக் கண்டித்து ஆத்திரமடைந்த உறவினர்களும் பகுதி மக்களும் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சோஹாக்பூர் எஸ்டிஎம் அமிர்தா கார்க் தெரிவித்த தகவலின்படி, ஆட்சியரின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆட்சியர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனை சிவில் சர்ஜன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் குளத்தில் குதித்ததற்கான காரணம் மற்றும் மருத்துவமனையில் ஏற்பட்ட அலட்சியம் குறித்து இந்த விசாரணைக் குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in