“நீ மிகவும் அழகாக இருந்தாய்..” இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி 2 ஆண்டாக மிரட்டிய போலீஸ் அதிகாரி.. பரபரப்புக் குற்றச்சாட்டு..!! – cinefeeds
Connect with us

CRIME

“நீ மிகவும் அழகாக இருந்தாய்..” இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி 2 ஆண்டாக மிரட்டிய போலீஸ் அதிகாரி.. பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில், காவல் நிலைய அதிகாரி அமித் சிங் குஷ்வாஹா தனக்கு ஆபாச வீடியோ மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக இளம்பெண் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “நீ ஊர்வலத்திற்கு வந்திருந்தாய், மிகவும் அழகாக இருந்தாய்” என்று அந்த அதிகாரி தனக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிப்பேன் என்று கூறியபோது தன்னை மிரட்டியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் காவல் நிலைய அதிகாரியும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மதுபான வியாபாரி ஒருவரும் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தன்னையும் தனது குடும்பத்தினரையும் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது தாய் தாக்கப்பட்டது குறித்துப் புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்த போலீசார், தன்னைத் தவறாக நடத்தி வெளியே தள்ளியதாகவும் அந்த இளம்பெண் வேதனையுடன் கூறியுள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அதேசமயம், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள காவல் ஆய்வாளர் அமித் சிங் குஷ்வாஹா, தன்னைச் சிக்க வைப்பதற்காகப் பின்னப்பட்ட சதி இது என்று விளக்கமளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in