LATEST NEWS
நீங்கலாம் மனுஷப்பிறவிதானா..? போஸ்ட்மார்ட்டம் பண்ணக்கூட லஞ்சமா..? சடலத்தையும் விட்டுவைக்காத சுகாதாரத் துறை ஊழியர்கள் – வைரலாகும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள தேசாஹி தியோரியா பகுதிக்குட்பட்ட பிப்ரா தௌலா கடம் (Pipra Daula Kadam) சமூக சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படை நிலைமை குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
அந்த அரசு சுகாதார நிலையத்தில் பிரேதப் பரிசோதனை (Postmortem) செய்வதாகக் கூறி, உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனையில் இலவசமாகச் செய்யப்பட வேண்டிய பிரேதப் பரிசோதனைக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக வெளியாகியுள்ள இந்த வீடியோ புகார், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், சுகாதாரத் துறை அதிகாரிகள் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
