“என் பிள்ளையை சாவடிச்சிகிட்டிங்களே பாவிங்களா” ஆத்திரத்தில் மகளின் சடலத்தை புகுந்த வீட்டு வாசலில் எரித்த பெற்றோர்… ஊரே நின்னு பார்த்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் பிள்ளையை சாவடிச்சிகிட்டிங்களே பாவிங்களா” ஆத்திரத்தில் மகளின் சடலத்தை புகுந்த வீட்டு வாசலில் எரித்த பெற்றோர்… ஊரே நின்னு பார்த்த பகீர் சம்பவம்..!!

Published

on

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமதுபூர் படாஹி கிராமத்தில், திருமணமான பெண்ணின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சந்தன் தாக்கூர் என்பவரை மணந்த விபா தேவி என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிப் பெண்ணின் குடும்பத்தினர் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.

உயிரிழந்த விபா தேவியின் உடலுக்குப் பிரேதப் பரிசோதனை முடிந்த கையோடு, அவரது குடும்பத்தினர் உடலை நேராகப் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு, மாமியார் வீட்டின் பிரதான நுழைவாயிலிலேயே (Gate) சிதை அடுக்கி, அனைவரும் பார்க்கும் வண்ணம் விபா தேவியின் இறுதிச் சடங்குகளைச் செய்து உடலைத் தகனம் செய்தனர்.

Advertisement

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் முகமதுபூர் படாஹி கிராமம் முழுவதும் பதற்றம் நிலவுவதுடன், இது குறித்துப் பல்வேறு விவாதங்களும் எழுந்துள்ளன. இதற்கிடையில், விபா தேவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணி குறித்த காவல்துறையின் அதிகாரப்பூர்வ விசாரணை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in