“இரவு முழுவதும் சடலத்தைக் கட்டிப்பிடித்து உறங்கிய நபர்”… கதவைத் திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி… பூட்டிய அறைக்குள் நடந்தது என்ன..? சிவகங்கையை உலுக்கிய மர்ம மரணம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இரவு முழுவதும் சடலத்தைக் கட்டிப்பிடித்து உறங்கிய நபர்”… கதவைத் திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி… பூட்டிய அறைக்குள் நடந்தது என்ன..? சிவகங்கையை உலுக்கிய மர்ம மரணம்..!!

Published

on

சிவகங்கை ஒளவையார் தெருவைச் சேர்ந்த 60 வயதான ஜோதி என்ற சித்தாள் பெண்ணும், கொட்டகுடியைச் சேர்ந்த ராசுக்குட்டி என்ற கொத்தனாரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த நவம்பர் 25-ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படும் சூழலில், மறுநாள் இருவரும் வழக்கமான வேலைக்குச் செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த மேஸ்திரி, மாலையில் வீட்டிற்குச் சென்று நீண்ட நேரம் அழைத்தும் கதவு திறக்கப்படாததால் அவர்களது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஜோதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததும், அவரது சடலத்தைக் கட்டிப்பிடித்தபடி ராசுக்குட்டி மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்ததும் தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக இது குறித்து சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மதுபோதையில் இருந்த ராசுக்குட்டியைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், இது தகராறினால் ஏற்பட்ட கொலையா அல்லது உடல்நலக்குறைவால் ஏற்பட்ட மரணமா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே தெரியவரும் எனக் கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in